அதிமுக தொண்டர்களுக்கு எச்சரிக்கை விடுத்த திருமங்கலம் டிஎஸ்பி
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மற்றும் ஆட்டோவிற்கு ஸ்டிக்கர் ஒட்டி அதிமுக மாநாடு குறித்த விழிப்புணர்வு பிரசாரத்தை முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தொடங்கி வைத்தார். இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக சென்ற நிலையில், திருமங்கலம் டிஎஸ்பி வசந்தகுமார் அனுமதியின்றி ஊர்வலமாக செல்வதாக கூறி எச்சரிக்கை விடுத்தார். மேலும் வழக்கு தொடுக்க உள்ளதாக எச்சரிக்கை விடுத்ததையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.
Next Story
