திமுக பிரமுகரை வெட்டி கொடூரமாக கொலை செய்த நபர்கள்..! நீதிமன்றம் அதிரடி உத்தரவு

x

திண்டுக்கல் ஒய்.எம்.ஆர்.பட்டி வ.உ.சி.நகரில் வசித்து வந்த திமுக பிரமுகர் பட்டறை சரவணன் என்பவரை, கடந்த 20-ந்தேதி கும்பல் ஒன்று அரிவாளால் வெட்டிக் கொலை செய்தது. இந்த வழக்கில், அல் ஆசிக் என்ற ஆசிக்முகமது உள்பட 8 பேர் கடந்த 21-ந்தேதி அருப்புக்கோட்டை நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.

இதையடுத்து அவர்கள் 8 பேரும் திண்டுக்கல் 2-வது மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் சரவணன் கொலை தொடர்பாக 8 பேரையும் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு, திண்டுக்கல் வடக்கு போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், 8 பேரையும் 2 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிப்பதற்கு அனுமதி அளித்து உத்தரவிட்டது.


Next Story

மேலும் செய்திகள்