கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக கூண்டோடு கலைப்பு.. ராமதாஸ் அறிவிப்பு

x

கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக அமைப்பு கலைக்கப்படுவதாக, அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். இதன்படி, உளுந்தூர்பேட்டை, ரிஷிவந்தியம் ஆகிய சட்டப்பேரவை தொகுதிகளை உள்ளடக்கிய கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக கலைக்கப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமக தலைவர், செயலாளர் உள்ளிட்ட அனைத்து பொறுப்பாளர்களும் விடுவிக்கப் பட்டுள்ளனர். மேலும், கள்ளக்குறிச்சி கிழக்கு மாவட்ட பாமகவுக்கு புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய மாநில அமைப்பு குழு செயலாளர் தருமபுரி சண்முகம் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்