INDIA vs PAKISTAN...ஹாக்கி தொடர் "போட்டியை நேரில் காண்கிறார் முதல்வர்"...

x

ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடரில் இன்று இந்தியா - பாகிஸ்தான் இடையில் நடைபெறும் லீக் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் காணவுள்ளார்.

லீக் சுற்றின் கடைசி நாள் போட்டிகள் இன்று நடைபெற உள்ளன. எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் மைதானத்தில் மாலை 4 மணிக்கு ஜப்பான், சீனா மோதவுள்ளன. மாலை 6.15 மணிக்கு தென் கொரியா, மலேசியா மோதுகின்றன. இரவு 8.30 மணிக்கு இந்தியா, பாகிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதையொட்டி, மைதானத்திற்கு சென்று இந்தப் போட்டியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்க்கவுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்