முன்னாள் IPS அதிகாரி விஜயகுமாருக்கு பாரதி விருது..!

x

சென்னை மயிலாப்பூரில் பாரதி திருவிழா 2023 நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஆளுநர் ரவி, ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமாருக்கு இந்த ஆண்டுக்கான பாரதி விருதை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், பல்கலைக்கழகங்களில் பாரதியார் பெயரில் இருக்கைகள் இல்லாமல் உள்ளதாக கூறினார். பல்வேறு தலைவர்கள் பெயரில் இருக்கைகள் உள்ள நிலையில் பாரதியார் பெயரிலும் இருக்கைகள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

அனைத்து விழாக்களிலும் தேசிய கீதம், தமிழ்த்தாய் வாழ்த்து பாடலை தொடர்ந்து, பாரதியாரின் பாருக்குள் நம்ம நாடு பாடல் நிச்சயம் இடம்பெற்று வருகிறது என்றும் ஆளுநர் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்