அதிமுக சென்னையில் போராட்டம்..அனுமதி, பாதுகாப்பு கோரி காவல் துறையிடம் மனு
மின் கட்டண உயர்வைக் கண்டித்து சென்னையில் வரும் 27ம் தேதி போராட்டம் நடத்த அனுமதி கோரி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் காவல் துறையிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையைத் தவிர அதிமுக அமைப்பு ரீதியிலான மாவட்ட தலைநகரங்களில் இன்று போராட்டம் நடைபெறும் நிலையில், வரும் 27ம் தேதி சென்னையில் போராட்டம் நடத்தப்பட உள்ளது. சுமார் 10 ஆயிரம் பேர் போராட்டத்தில் கலந்து கொள்ளும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கூட்டம் அதிகளவு இருக்கும் என்பதால் தகுந்த பாதுகாப்பு மற்றும் அனுமதி கோரி சென்னை மாநகர காவல் ஆணையரகத்திற்கு அதிமுக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. இன்று அல்லது நாளைக்குள்ளாக அதற்கான அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story