"2 பெண்களை முதலமைச்சராக கொடுத்த‌து அதிமுக" - அதிமுக எம்.பி. தம்பிதுரை பேச்சு

x

அதிமுகவை தவிர திராவிட இயக்கம் என்று கூறும் மற்ற எந்த கட்சியும் ஒரு பெண்ணை முதல்வராக்க முடியவில்லை என மாநிலங்களவையில் அதிமுக எம்பி தம்பிதுரை உரையாற்றினார். மகளிர் இட ஒதுக்கீடு மீதான விவாத‌த்தில் பேசிய அவர், பெண்களுக்கு அதிகாரம் அளித்ததிலும் அரசு நிர்வாகத்தில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியதிலும் அதிமுக வரலாற்று சிறப்புமிக்க பங்கு வகித்துள்ளதாக தெரிவித்தார். முன்னாள் முதலமைச்சர்கள் ஜானகி மற்றும் ஜெயலலிதா ஆகிய 2 பெண் முதல்வர்களை தமிழகத்திற்கு வழங்கிய ஒரே திராவிட இயக்கம் அதிமுக தான் என்ற தம்பிதுரை, ஆனால் திராவிட இயக்கம் என்று கூறும் மற்ற கட்சிகள் ஒரு பெண்ணை முதல்வராக முடியவில்லை என்றார்.


Next Story

மேலும் செய்திகள்