ஈபிஎஸ் வெளியிட்ட பரபரப்பு அறிக்கை

x

தமிழ்நாட்டிற்கு தர வேண்டிய 90 டி.எம்.சி நிலுவை தண்ணீரை பெற, கர்நாடக அரசுக்கு முழு அழுத்தம் தர வேண்டும் என்று, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். அவர், வெளியிட்டுள்ள அறிக்கையில், டெல்டா மாவட்டங்களில் கருகி வரும் பயிர்களைக் காப்பாற்ற மேட்டூரில் இருந்து 2 டி.எம்.சி. தண்ணீரைத் திறக்க இருப்பதாக, தி.மு.க. அரசு அறிவித்துள்ளதாக கூறியுள்ளார். ஆனால், தமிழகத்தில் 20 மாவட்டங்களுக்கும் மேற்பட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாக விளங்கும் மேட்டூர் அணையில், தற்போது சுமார் 33 டி.எம்.சி. தண்ணீர் மட்டுமே உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தமிழகத்திற்கு தர வேண்டிய நிலுவை பங்கான, சுமார் 90 டி.எம்.சி-தண்ணீரை, கர்நாடகாவிடம் இருந்து தமிழக அரசு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்