திமுகவில் இணைந்த நாம் தமிழர் கட்சியினர்.. முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இணைப்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது.
x
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நாம் தமிழர் கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. நூற்றுக்கும் மேற்பட்ட மாவட்ட ஒன்றிய பொறுப்பாளர்கள் உள்ளிட்ட 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர். அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், ஆட்சியில் இருந்தாலும் இல்லை என்றாலும் தமிழர்களுக்கும் தமிழுக்கும் தொடர்ந்து திமுக குரல் கொடுத்து வருவதாகத் தெரிவித்த அவர், தமிழகத்தில் அரசு வேலைகள் தமிழர்களுக்குத் தான் என்று உறுதிப் படுத்தப்பட்டுள்ளதாகவும், 10 அல்லது 20 ஆண்டுகள் ஆட்சியில் இருந்தால் என்ன செய்ய முடியுமோ அதை திமுக ஒரே ஆண்டில் செய்து காண்பித்திருப்பதாகவும் முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்