அ.தி.மு.கவின் மே தின பொதுக்கூட்டம்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மே தின பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
அ.தி.மு.கவின் மே தின பொதுக்கூட்டம்... சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மே தின பொதுக்கூட்டத்தை நடத்த அதிமுகவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இதுதொடர்பாக அதிமுக விழுப்புரம் நகர செயலாளர் எம்.பாபு என்பவர் தொடர்ந்த வழக்கில், கள்ளக்குறிச்சியில் பொதுக்கூட்டம் நடத்த விண்ணப்பித்த போது, பரிசீலிக்காமல் அழைக்கழிப்பதாக கூறியுள்ளார்.
இந்த மனு நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தபோது, சாலைகளில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது உள்ளிட்ட நிபந்தனைகளுடன் பொதுக்கூட்டத்திற்கு அனுமதி வழங்கினார்.
மேலும், போதிய பாதுகாப்பை வழங்குமாறும் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.
Next Story