செல்வபெருந்தகை பேச்சால் கூச்சல், குழப்பம்-பேரவையில் அதிமுகவினர் தர்ணா-வெளியேற்ற உத்தரவிட்ட சபாநாயகர்

சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் குறித்து பேசியதாக கூறப்படுகிறது.
x
முன்னாள் முதலமைச்சர் குறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வபெருந்தகை பேசியதை அவை குறிப்பில் இருந்து நீக்ககோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அதிமுகவினர், சட்டப்பேரவையில் இருந்து கூண்டோடு வெளியேற்றப்பட்டனர். சட்டப்பேரவையில் தஞ்சாவூர் தேர் விபத்து குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் எம்எல்ஏ செல்வ பெருந்தகை பேசும்போது, முன்னாள் முதலமைச்சர் குறித்து பேசியதாக கூறப்படுகிறது. இதை அவை குறிப்பில் இருந்து நீக்க வலியுறுத்தி பேசுவதற்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி அனுமதி கோரினார். இதற்கு சபாநாயகர் அப்பாவு மறுப்பு தெரிவித்ததால், அதிமுகவினர் தொடர்ந்து கூச்சல் குழப்பத்தில் ஈடுபட்டனர். சபாநாயகருக்கு எதிரே நின்றும், அமர்ந்தும் முழக்கம் இட்டவாறு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அதிமுகவினரை வெளியேற்றும்படி அவை காவலர்களுக்கு சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார். இதையடுத்து, அதிமுக உறுப்பினர்கள் குண்டுகட்டாக வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவத்தால் பேரவையில் கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்