மின்சாரம் குறித்து 19 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என, அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்துள்ளார்.
மின்சாரம் குறித்து 19 அறிவிப்புகளை வெளியிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி
எரிசக்தி துறை மானிய கோரிக்கையில் 19 புதிய அறிவிப்புகளை மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி வெளியிட்டார்.
அவர் வெளியிட்டுள்ள அறிவிப்புகளில் 50 ஆயிரம் விவசாயிகளுக்கு இலவச விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
சிறப்பு முன்னுரிமையில் உள்ள விவசாய விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் இலவச மின் இணைப்பு வழங்கப்படும் என்றும், அமைச்சர் செந்தில்பாலாஜி அறிவித்தார்.
தமிழ்நாடு முழுவதும் 2000 மெகாவாட் சூரிய மின்சக்தி பூங்கா நிறுவுவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும்.
விவசாய மின் இணைப்பு மட்டும் கொண்ட மின் பாதைகளை சூரிய ஒளி சக்தி மூலம் மின்மயமாக்கல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ரூபாய் ஆயிரத்து 649 கோடி செலவில் 100 புதிய துணை மின் நிலையங்களை நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
ரூபாய் 166 கோடி மதிப்பீட்டில் மிக உயர் அழுத்த மின் மாற்றிகள் திறனை மேம்படுத்தப்படும் .
என்றும், மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் மையங்கள் சாலையோரம் இருக்கும் துணை மின் நிலையங்களில் நிறுவப்படும் என்பது உள்ளிட்ட 19 அறிவிப்புகளை அவர் வெளியிட்டார்.
Next Story