காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியை 3-வது முறையாக சந்தித்த பிரசாந்த் கிஷோர் ! - காரணம் என்ன ?

டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன் பிரசாந்த் கிஷோர் மூன்றாவது முறையாக ஆலோசனை நடத்தினார்.
x
 2024 நாடாளுமன்றத் தேர்தல் குறித்து, இரண்டு முறை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியுடன், தேர்தல் வியூகம் வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் ஆலோசனை நடத்தியுள்ளார். இந்நிலையில், மூன்றாவது முறையாக அவரது இல்லத்திற்கு சென்ற பிரசாந்த் கிஷோர், சோனியா காந்தியுடன் ஆலோசனை மேற்கொண்டார். மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், அம்பிகா சோனி, கமல்நாத், கே.சி. வேணுகோபால், முகுல் வாஸ்னிக், ஏ.கே. ஆண்டனி, ரந்தீப் சுர்ஜேவாலா ஆகியோர் பங்கேற்றனர். கூட்டத்தில், மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது உள்ள அரசியல் சூழ்நிலை மற்றும் விரைவில் தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் எவ்வாறு களம் காண்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது. வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் ராகுல் காந்தி இருப்பதால், அவர் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

Next Story

மேலும் செய்திகள்