காங்., தலைவர் சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு... பின்னணி என்ன?

டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது...
x
காங்., தலைவர் சோனியாவுடன் பிரசாந்த் கிஷோர் சந்திப்பு... பின்னணி என்ன?

டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தின்போது, பிரியங்கா காந்தி, ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, கே.சி.வேணுகோபால், ஜெய்ராம் ரமேஷ், பி சிதம்பரம், முகுல் வாஸ்னிக் மற்றும் அம்பிகா சோனி ஆகியோரும் கலந்து கொண்டனர். குஜராத், இமாச்சலப் பிரதேசம், கர்நாடகா, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வியூகம் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதனிடையே, டெல்லி வந்துள்ள ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெகபூபா முப்தி, காங்கிரஸ்  தலைவர் சோனியா காந்தியை சந்தித்து, நாட்டின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து ஆலோசனை நடத்தினார்.Next Story

மேலும் செய்திகள்