கொரோனா உயிரிழப்பு சர்ச்சை..."உண்மையை பிரதமர் மூடி மறைக்கிறார்" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 40 லட்சம் பேர் உயிரிழந்திருக்க கூடும் என உலக சுகாதார நிறுவனம் கூறுவதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது...
x
கொரோனா உயிரிழப்பு சர்ச்சை..."உண்மையை பிரதமர் மூடி மறைக்கிறார்" - ராகுல்காந்தி குற்றச்சாட்டு

இந்தியாவில் கொரோனா தொற்றுக்கு 40 லட்சம் பேர் உயிரிழந்திருக்க கூடும் என உலக சுகாதார நிறுவனம் கூறுவதாக அமெரிக்காவின் பிரபல நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. இந்த நிலையில் அந்த செய்தியை மேற்கோள் காட்டி பிரதமரை ராகுல்காந்தி விமர்சித்துள்ளார். பிரதமர் மோடி உண்மையை சொல்வதும் இல்லை, பிறரை உண்மை பேச விடுவதும் இல்லை என்ற ராகுல்காந்தி, ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்தியாவில் யாரும் உயிரிழக்கவில்லை என மோடி கூறி வருவதாக தெரிவித்துள்ளார். இந்தியாவில் கிட்டத்தட்ட 40 லட்சம் பேர் கொரோனாவால் உயிரிழந்திருக்க கூடிய நிலையில், 5 லட்சம் பேர் உயிரிழந்தனர் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் பொய்யான தகவலை கூறுவதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், கொரோனாவால் உயிரிழந்தோரின் குடுபத்தாருக்கு தலா 4 லட்சம் இழப்பீடு வழங்க வேன்டும் என்றும் வலியுறுத்தினார்.

Next Story

மேலும் செய்திகள்