"தமிழகத்திற்கான நிதியை மத்திய அரசு குறைத்துள்ளதா..? - மத்திய அமைச்சர் எல். முருகன் பேட்டி

தமிழகத்திற்கான எந்த நிதியையும் மத்திய அரசு குறைத்ததில்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.
x
தமிழகத்திற்கான எந்த நிதியையும் மத்திய அரசு குறைத்ததில்லை என மத்திய அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார். திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோயிலில் சாமி தரிசனம் செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசின் பல்வேறு திட்டங்களில், பயனாளிகள் அதிகம் இருக்கும் மாநிலம் தமிழகம்தான் என்றார். மீனவர்களுக்கு தனியாக அமைச்சகம் ஏற்படுத்தப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மீன்பிடி தடைக்காலம் ​நிவாரணமாக, மீனவர்களுக்கு ஆயிரத்து 500 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்