ராமேஸ்வரத்தில் பிரமாண்ட அனுமன் சிலை ; பிரதமர் மோடி அறிவிப்பு!

குஜராத்தில் பிரமாண்ட அனுமன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ராமேஸ்வரத்திலும் அனுமன் சிலை அமைக்கப்படும் என்றார்.
x
ராமேஸ்வரத்தில் பிரமாண்ட அனுமன் சிலை ; பிரதமர் மோடி அறிவிப்பு!

குஜராத்தில் பிரமாண்ட அனுமன் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி, ராமேஸ்வரத்திலும் அனுமன் சிலை அமைக்கப்படும் என்றார்.

 அனுமன் ஜெயந்தியை ஒட்டி இந்தியாவின் 2வது மிகப்பெரிய அனுமன் சிலையை பிரதமர் மோடி திறந்து வைத்தார். குஜராத் மாநிலம் மோர்பியில் உள்ள பாபு கேசவானந்த் ஆசிரமத்தில் அமைக்கப்பட்ட 108 அடி உயர பிரமாண்ட சிலை காணொலி மூலம் திறந்து வைக்கப்பட்டது. நிகழ்வில் பேசிய பிரதமர் மோடி, மிகப்பெரிய அனுமன் சிலையை திறந்து வைப்பதில் பெருமிதம் கொள்வதாக கூறினார். அனுமன் வாழ்க்கையுடன் தொடர்புடைய 4 திசைகளில் மிகப்பெரிய சிலைகள் அமைக்கப்படுவதாக குறிப்பிட்ட அவர், முதல் சிலை சிம்லாவிலும், 2வது சிலை குஜராத்திலும் நிறுவப்பட்டதாக கூறினார். அடுத்த இரு சிலைகளில் ஒன்று ராமேஸ்வரத்திலும், மற்றொன்று மேற்கு வங்கத்திலும் அமைக்கப்படும் என்றார். மேலும் ஒரே பாரதம் உன்னத பாரதம் என்ற நோக்கத்துடன் இந்தியாவின் 4 மாநிலங்களில் பிரமாண்ட அனுமன் சிலைகள் அமைக்கப்படுவதாகவும் குறிப்பிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்