சசிகலாவின் கூட்டத்திற்கு வந்த மூதாட்டி மயங்கி விழுந்து பலி - அதிர்ச்சி சம்பவம்!

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வி.கே.ச‌சிகலாவை அவரை வரவேற்க வைக்கப்பட்ட அதிமுக கொடிகள், அதிமுகவினரின் எதிர்ப்பால் அகற்றப்பட்டன.
x
சசிகலாவின் கூட்டத்திற்கு வந்த மூதாட்டி மயங்கி விழுந்து பலி - அதிர்ச்சி சம்பவம்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் வி.கே.ச‌சிகலாவை அவரை வரவேற்க வைக்கப்பட்ட அதிமுக கொடிகள், அதிமுகவினரின் எதிர்ப்பால் அகற்றப்பட்டன.

திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள பிரசித்தி பெற்ற அவிநாசி லிங்கேஸ்வர‌ர் கோயிலில், சாமி தரிசம் செய்ய வி.கே.ச‌சிகலா சென்றார். அவருக்கு, அ.ம.மு.க.வினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் பங்கேற்ற ச‌சிகலா, சாமி தரிசனம் செய்தார். அப்போது, சன்னதியில் அ.ம.மு.க. நிர்வாகிகள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டு கைகலப்பில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அதே நேரத்தில், ச‌சிகலாவை வரவேற்க ஆங்காங்கே அ.தி.மு.க. கொடிகள் வைக்கப்பட்டிருந்த நிலையில், அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவித்த‌தால், அவை அனைத்தும் அகற்றப்பட்டன. முன்னதாக, சேயூரில் வரவேற்பு கூட்டத்திற்காக கூட்டி வரப்பட்ட கிளாகுளத்தை சேர்ந்த பட்டாள் என்ற மூதாட்டி மயங்கி விழுந்தார். அவரை மருத்துவமனையில் கொண்டு சென்ற போது, ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவத்தனர்.

Next Story

மேலும் செய்திகள்