கேரளா புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேரளா சென்றுள்ளார்.
கேரளா புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக கேரளா சென்றுள்ளார். கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 23வது மாநில மாநில மாநாடு, அம்மாநிலத்தில் உள்ள கண்ணூரில் இன்று மாலை நடைப்பெற உள்ளது. இதில், கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி விமானம் மூலம் சென்னையிலிருந்து கண்ணூர் புறப்பட்டு சென்றார். மேலும், விமான நிலையத்தில் முதலமைச்சரை அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், தா.மோ.அன்பரசன் ஆகியோர் வழியனுப்பி வைத்தனர். இதனிடையே, முதலமைச்சர் மாநாட்டில் கலந்து கொண்டு இரவு சென்னை திரும்புவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Next Story