"கோவையும் கரூரும் எனது இரு கண்கள்" - அமைச்சர் செந்தில்பாலாஜி
கோவை கொடிசியா வளாகத்தில், வாட்டர் இன்டெக் 2022 கண்காட்சியை, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்.
கோவையும் கரூரும் தமக்கு இரண்டு கண்கள் போன்றது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
கோவை கொடிசியா வளாகத்தில், வாட்டர் இன்டெக் 2022 கண்காட்சியை, மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர், கோவைக்கு என முதலமைச்சர் ஸ்டாலின் தனிக்கவனம் எடுத்து வருவதாக தெரிவித்தார். இங்கு வைக்கப்பட்டுள்ள அனைத்து கோரிக்கைகளையும் உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார். கரூரில் இது போன்ற கண்காட்சிகள் நடத்தப்படவேண்டும் என்றும், தமக்கு கோவையும் கரூரும் இரண்டு கண்கள் போன்றவை என்றும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார்.
Next Story