"மக்கள் கோபத்தில் இருக்காங்க.. ஜெயலலிதா ஆட்சியில் எப்படி இருந்தது?" - ஓபிஎஸ் குற்றச்சாட்டு
விருப்பு, வெறுப்புகளை களைந்து கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த வேண்டும் என அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரினார்.
விருப்பு, வெறுப்புகளை களைந்து கட்சி அமைப்புத் தேர்தலை நடத்த வேண்டும் என அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரினார். தனது பண்ணை வீட்டில் நடந்த அதிமுக உட்கட்சி அமைப்புத் தேர்தல் குறித்து கூட்டத்தில் பேசிய அவர், ஒரு சாமானியன் முதல்வராக வரமுடியும் என்பது அதிமுகவில் மட்டும்தான் என்றார். வரும் நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் அதிமுகவுக்கு தான் வெற்றி வாய்ப்பு அதிகமாக உள்ளது எனவும், திமுகவின் மீது மக்கள் வெறுப்படைந்து விட்டார்கள் என்றும் கூறினார். கஞ்சா அதிகளவில் பிடிபடுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
Next Story