"ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியைப் பயன்படுத்துங்கள்!" - சர்ச்சையை கிளப்பிய அமித்ஷா

டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற 37வது நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுப்பினர்களிடம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.
x
ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நேற்று மாலை நடைபெற்ற 37வது நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழுவின் கூட்டத்தில் பேசிய உள்துறை அமைச்சர் அமித்ஷா உறுப்பினர்களிடம் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற அலுவல் மொழிக் குழிவின் தலைவராக உள்ள அமித்ஷா, வெவ்வேறு மாநில மக்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ள இந்தியைப் பயன்படுத்த வேண்டும் என்றும், உள்ளூர் மொழிகளுக்கு மாற்றாக அல்லாமல், ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தியை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினார். தொடர்ந்து பேசிய அவர் மத்திய அமைச்சவரையின் 70 சதவீத குறிப்புகள் இந்தி மொழியிலேயே தயாரிக்கப்படுவதாகக் குறிப்பிட்டார். நாட்டை ஒற்றுமைப் படுத்துவதில் அலுவல் மொழியை முக்கியமான அங்கமாக மாற்ற வேண்டிய நேரம் வந்து விட்டதாகவும், உள்ளூர் மொழிகளின் வார்த்தைகளை ஏற்று இந்தி மொழியை நெகிழ்வுத் தன்மை கொண்டதாக மாற்றாத வரையில் அது பரப்பப்படாது என்றும் அமித்ஷா குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்