ஓபிஎஸ், ஈபிஎஸ் முன்னிலையில் கடும் வாக்குவாதமா? - திடீரென வெளியேறிய வைத்தியலிங்கம்

சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில...
x
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக தலைமை அலுவலகமான எம்ஜிஆர் மாளிகையில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடனான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.  இந்த கூட்டத்தில் அதிமுக மூத்த நிர்வாகிகள், முன்னாள் சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் மற்றும் முன்னாள் அமைச்சர்கள்  செங்கோட்டையன்,  எஸ்.பி.வேலுமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், நத்தம் விஸ்வநாதன், வைத்திய லிங்கம், உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர். ஆலோசனையின் போது,  சிவி. சண்முகம் - துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் வைத்தியலிங்கம் கூட்டம் முடியும் முன்பே கிளப்பிச் சென்றுள்ளார். அதனைத் தொடர்ந்து நடைப்பெற்ற சமாதான பேச்சுவார்த்தையை தொடர்ந்து, வைத்தியலிங்கம் மீண்டும் அலுவலகத்திற்குள் வந்ததாக கூறப்படுகிறது. இறுதியில் உட்கட்சி தேர்தல் தொடர்பான அறிவிப்பை இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் கூட்டாக வெளியிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்