ஜெகஜீவன்ராமின் 115 வது பிறந்த நாள் உருவ சிலைக்கு மலர் தூவி மரியாதை!
முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராமின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழிலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
சென்னையில் மறைந்த முன்னாள் துணை பிரதமர் பாபு ஜெகஜீவன்ராமின் 115 வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழிலகத்தில் உள்ள அவரது திருவுருவ சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது. பாபு ஜெகஜீவன்ராம், 1946 ம் ஆண்டில் நேருவின் தலைமையிலான இடைக் கால அரசின் தொழிலாளர் நலத்துறை அமைச்சராகவும், இந்திய அரசியலமைப்பு சட்ட முன்வடி குழுவின் உறுப்பினராக செயல்பட்டவர். இவரது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை துறைமுக பொறுப்பு கழகத் துணைத் தலைவர் பாலாஜி அருண்குமார், சட்டமன்ற குழு தலைவர் செல்வப் பெருந்தகை, தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் சிரிவெல்ல பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்று,
மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
மலர்தூவி மரியாதை செலுத்தினர்.
Next Story