முன் வரிசையில் யார் நிற்பது.. போராட்டதில் போட்டி போட்ட காங்கிரசார்
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது.
பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து தேனியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஒப்பாரி வைக்கும் நூதன போராட்டம் நடைபெற்றது. பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலை உயர்வை கண்டித்து தேனி பழைய பேருந்து நிலையம் முன்பாக காங்கிரஸ் கட்சியினர் போராட்டம் நடத்தினர். அப்போது பெண்கள் சிலர், கேஸ் சிலிண்டரின் முன் அமர்ந்து ஒப்பாரி வைத்து நூதன போராட்டத்திலும் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது முன் வரிசையில் யார் நிற்பது என்ற போட்டியால், காங்கிரஸ் கட்சியினர் சிறிது நேரம் இரண்டு குழுக்களாக பிரிந்து போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
Next Story