BREAKING || எஸ்.பி.வேலுமணி வழக்கு - தமிழக அரசு பதில் மனு!

டெண்டர் முறைகேடு வழக்கும், முதல்கட்ட விசாரணை அறிக்கை க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.
x
டெண்டர் முறைகேடு வழக்கும், முதல்கட்ட விசாரணை அறிக்கை க்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை.


2021, ஜூன் மாதம் வெளியிடப்பட்ட சிஏஜி அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு எஸ் பி வேலுமணிக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது.  அதன்பிறகு இந்த வழக்கு தொடர்புடைய பல்வேறு ஆதாரங்கள் திரட்டப்பட்டன.


முதல்கட்ட விசாரணை அறிக்கையின் அடிப்படையில் குற்றச்சாட்டு பதிவு செய்யும் பட்சத்தில் அதன் நகலை எஸ் பி வேலுமணி அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது.



டெண்டர் முறைகேடு வழக்கில் விசாரணை நடத்தப்பட்டு தனக்கு தண்டனை கிடைத்து விடும் என்ற அச்சத்தின் காரணமாகவும்,
விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கத்திலும், முட்டுக்கட்டை போடும் வகையிலும் மனுதாரர் எஸ் பி வேலுமணி உச்சநீதிமன்றத்தில் இந்த மேல்முறையீடு மனுவை தாக்கல் செய்துள்ளார்.


இதுபோன்ற சூழலில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிடுவது பொருத்தமாக இருக்காது. மேல்முறையீட்டு மனுவில் எவ்வித முகாந்திரமும் இல்லை என்பதால், அதை தள்ளுபடி செய்து உத்தரவிட வேண்டும்.

Next Story

மேலும் செய்திகள்