வேதா நிலையம் வழக்கு - அதிமுக மேல்முறையீடு!
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மனு தாக்கல்...
வேதா நிலையம் வழக்கு - அதிமுக மேல்முறையீடு மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வேதா நிலையம் இல்லம் தொடர்பான சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் அதிமுக மேல்முறையீடு மனு தாக்கல் செய்துள்ளது. ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை, நினைவு இல்லமாக மாற்றுவதற்காக, கையகப்படுத்தி முந்தைய அதிமுக அரசு பிறப்பித்த உத்தரவுகளை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து சி.வி.சண்முகம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில், 3ம் நபர் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றம் கடந்த ஜனவரி 5ஆம் தேதி அளித்த தீர்ப்பில், பொதுப் பயன்பாடு இல்லை என்றும் உரிமையாளர் விருப்பத்திற்கு முரணாக கையகப்படுத்தபட்டு உள்ளதாகவும் கூறி, தனி நீதிபதி உத்தரவில் தலையிட அவசியமில்லை என்று தெரிவித்து மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இந்த நிலையில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரி சிவி சண்முகம் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மார்ச் 10ம் தேதி மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story