"வெய்ட் பண்ணுங்க மக்களே... நிறைய பம்பர் பரிசு காத்திட்டு இருக்கு" - ஜெயக்குமார் கருத்து

சொத்து வரியை உயர்த்தியதைப் போல் இன்னும் பல்வேறு கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு திட்டம் - ஜெயக்குமார்.
x
சொத்து வரியை உயர்த்தியதைப் போல் இன்னும் பல்வேறு கட்டணங்களை உயர்த்த தமிழக அரசு திட்டமிட்டு இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார். ராயபுரம் காவல் நிலையத்தில் கையெழுத்திட்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய ஜெயக்குமார், தமிழக அரசு நியமித்த பொருளாதார நிபுணர்கள் என்ன செய்கிறார்கள் எனக் கேள்வி எழுப்பினார். மின் கட்டண உயர்வு, பேருந்துக் கட்டண உயர்வு என பல்வேறு பம்பர் பரிசுகள் மக்களுக்கு காத்திருப்பதாகவும் ஜெயக்குமார் விமர்சித்தார்.

Next Story

மேலும் செய்திகள்