"சமூகநீதிக்கான நமது அடுத்தக்கட்ட போராட்டம் தொடங்கும்" - ராமதாஸ்

வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வென்றெடுக்காமல் ஓயப்போவதில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சமூகநீதிக்கான நமது அடுத்தக்கட்ட போராட்டம் தொடங்கும் - ராமதாஸ்
x
வன்னியர்களுக்கான இடஒதுக்கீட்டை வென்றெடுக்காமல் ஓயப்போவதில்லை என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக தொண்டர்களுக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில், 10.5 சதவீத இடஒதுக்கீட்டு வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு இது மகிழ்ச்சியளிக்கவில்லை என்றாலும், இது வருத்தப்பட வேண்டிய தீர்ப்பு  இல்லை என தெரிவித்துள்ளார். இட ஒதுக்கீட்டிற்கு எதிராக இருப்பது, தெளிவான புள்ளிவிவரங்கள் இல்லை என்ற ஒரே முட்டுக்கட்டை மட்டும்தான் என்றும், அரசியல் போராட்டத்தின் மூலம் அதை  கடக்கத் தெரியாதா என கேள்வி எழுப்பியுள்ளார். எனவே, சமூகநீதிக்கான நமது அடுத்தக்கட்ட போராட்டம் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்