"டெல்லி பயண மர்மத்தை முதல்வர் விளக்குவாரா?" - எடப்பாடி பழனிசாமி கேள்வி

டெல்லி பயணத்தின் மர்மத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்குவாரா என, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
x
டெல்லி பயணத்தின் மர்மத்தை முதலமைச்சர் ஸ்டாலின் விளக்குவாரா என, சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், துபாயில் நடைபெற்று வந்த கண்காட்சி முடிய 6 நாட்களே உள்ள நிலையில் மக்கள் வரி பணத்தில் பெருஞ்செலவில் தமிழக அரங்கை திறந்து வைத்ததாக கூறியுள்ளார். அரசு முறைப்பயணம் என்றால் தனி விமானத்தில் குடும்பத்தோடு சென்றது ஏன்? என கேள்வி எழுப்பியதாகவும் அதற்கு அமைச்சர் தங்கம் தென்னரசு திமுக செலவை ஏற்றதாக மழுப்பினார் என்றும் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். பதவிக்கு வந்த 10 மாத காலத்தில் சிக்கலில் சிக்கியுள்ள முதலமைச்சர் ஸ்டாலின், தம்மையும் தமது குடும்பத்தினரையும் காப்பாற்ற கோரி, டெல்லியில் பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷாவை சந்திக்க சென்றிருப்பதாக செய்திகள் வருவதாகவும் எடப்பாடி பழனிசாமி புகார் கூறியுள்ளார். சட்டவிரோத பண பரிமாற்றம் உண்மை என்றால் உப்பை தின்றவர் தண்ணீர் குடித்தாக வேண்டும் என்றும், எடப்பாடி பழனிசாமி அறிக்கையில் கூறியுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்