முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான வழக்கு... ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் வழக்கில் நிரந்த வைப்பீட்டு தொகையை பறிமுதல் செய்யலாம் என்ற உத்தரவை நீட்டித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
x
முன்னாள் அமைச்சர் வேலுமணி மீதான ஊழல் வழக்கில் நிரந்த வைப்பீட்டு தொகையை பறிமுதல் செய்யலாம் என்ற உத்தரவை நீட்டித்து ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்த வழக்கில் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவரது உறவினர்களின் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அதில், அவர்களது வங்கிக் கணக்கில் உள்ள 110 கோடியே 93 லட்சம் ரூபாய் நிரந்தர வைப்பீட்டு தொகையை பறிமுதல் செய்ய அனுமதி அளித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கின் விசாரணையில் தனியார் நிறுவனம் தாக்கல் செய்த பதில் மனுவில், நிரந்தர வைப்பீட்டு தொகையை பறிமுதல் செய்யும் உத்தரவை நிராகரிக்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு, லஞ்ச ஒழிப்புத்துறை எதிர்ப்பு தெரிவித்து பதில்மனு தாக்கல் செய்தது. இதைத்தொடர்ந்து, ஏற்கனவே தாக்கல் செய்த மனுவில் உள்ள குறைபாடுகளை சரி செய்து லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை வருகிற ஏப்ரல் 5ம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டார். அதேவேளையில் நிறுவனங்களின் நிரந்தர வைப்பீட்டுத் தொகையை பறிமுதல் செய்ய பிறப்பிக்கப்பட்ட உத்தரவை நீட்டித்தும் நீதிபதி உத்தரவிட்டார்.

Next Story

மேலும் செய்திகள்