"சென்ட்ரல் மத்திய சதுக்கம்" - சிறப்பம்சம்கள் என்னென்ன?

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே கட்டப்பட்ட மத்திய சதுக்கத்தை முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
x
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் சார்பில் சென்ரல் ரயில் நிலையம் அருகே 400 கோடி ரூபாய் மதிப்பில் மத்திய சதுக்கம் திட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் பெரும்பாலான பணிகள் முடிவடைந்த நிலையில், சுரங்க நடைபாதை பணிகள் மற்றும் அழகுபடுத்தப்பட்ட வசதிகளை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் ஸ்டாலின் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். பின்னர், மத்திய சதுக்கம் திட்டம் குறித்த புகைப்பட தொகுப்பை பார்வையிட்ட முதலமைச்சர், மத்திய சதுக்கத்தில் மரக்கன்றை நட்டார். தொடர்ந்து சுரங்க நடைபாதையில் அமைக்கப்பட்ட்உள்ள நகரும் மின் படிக்கட்டில் முதலமைச்சர் பயணித்தார். இந்த சுரங்கப் பாதையால், சென்ட்ரலில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலையில் பாதசாரிகள் கடந்து செல்வது தவிர்க்கப்பட்டு, வாகனப் போக்குவரத்து நெரிசல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story

மேலும் செய்திகள்