வெள்ளலூர் மறைமுகத் தேர்தல் கலவரம் - பேரூராட்சித் தலைவரின் மகன் உட்பட 9 பேர் கைது

வெள்ளலூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலின் போது நிகழ்ந்த கலவரத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறி, பேரூராட்சித் தலைவரின் மகன் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
x
வெள்ளலூர் பேரூராட்சித் தலைவர் பதவிக்கான தேர்தலின் போது நிகழ்ந்த கலவரத்திற்கு காரணமாக இருந்ததாகக் கூறி, பேரூராட்சித் தலைவரின் மகன் உட்பட 9 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம் வெள்ளலூர் பேரூராட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தல் நடைபெற்றது. கடந்த 4ம் தேதி நடைபெற்ற தேர்தலின் போது வன்முறை ஏற்பட்டு மறைமுக தேர்தல் நிறுத்தி வைக்கப்பட்டு மீண்டும் நேற்று தேர்தல் நடத்தப்பட்டது. அப்போதும், கலவரம் வெடித்த நிலையில், அதிமுக திமுகவினர் இடையே ஏற்பட்ட மோதலால் திமுக பெண் கவுன்சிலரது கணவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதன் காரணமாக வன்முறைக்கு காரணமானவர்கள் என்று கூறி புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட அதிமுக பேரூராட்சி தலைவர் மருதாச்சலத்தின் மகன் உட்பட 9 பேரை, 6 வழக்குகளின் கீழ் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்