உ.பி. அமைச்சரவையில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த ஒருவருக்கு பதவி!

உத்தரபிரதேச மக்கள் தொகையில் சுமார் 20% இஸ்லாமிய சமூக கொண்டுள்ள நிலையில், ஒருவருக்கு மட்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
x
உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தலில் 273 இடங்களை வென்று தனிப்பெரும்கட்சியாக ஆட்சியை தக்கவைத்தது பாஜக...தொடர்ந்து வெள்ளிக்கிழமை அன்று லக்னோவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், பிரதமர் மோடி முன்னிலையில் தொடர்ந்து 2வது முறையாக யோகி ஆதித்யநாத் தலைமையில் அமைச்சரவை பதவியேற்றது. 18 கேபினட் அமைச்சர்களுடன் சேர்ந்து 52 பேர் கொண்ட உத்தரபிரதேச அமைச்சரவையில் 5 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பளிக்கப்பட்டது.
கடந்த ஆண்டு உத்தரகாண்ட் ஆளுநர் பதவியை ராஜினாமா செய்து மீண்டும் தேர்தல் அரசியலில் குதித்து வெற்றி பெற்ற பேபி ராணி மவுரியாவிற்கு கேபினட்டில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இவர் ஆக்ராவின் முதல் தலித் பெண் மேயர் என்ற பெருமைக்கு சொந்தக்காரர். தனி பொறுப்புடன் கூடிய மாநில இணை அமைச்சராக குலாப் தேவி பதவியேற்றார். இவர்களோடு, விஜய் லக்‌ஷ்மி கவுதம், பிரதீபா சுக்லா, ரஜினி திவாரி ஆகியோரும் இணை அமைச்சர்களாக பதவியேற்றனர்.
இதில் விஜய் லக்‌ஷ்மி கவுதம் 1992ஆம் ஆண்டு முதல் பாஜகவில் அங்கம் வகித்த நிலையில், 2017ல் சீட் கிடைக்காததால் சமாஜ்வாதிக்கு மாறினார். ஆனால் அந்த தேர்தலில் தோல்வியை சந்தித்தை அடுத்து, மீண்டும் பாஜகவில் இணைந்து வெற்றி பெற்று தற்போது இணை அமைச்சராக பதவியேற்றுள்ளார். இவர்களோடு, உத்தரபிரதேச மக்கள் தொகையில் சுமார் 20% இஸ்லாமிய சமூக கொண்டுள்ள நிலையில், ஒருவருக்கு மட்டும் அமைச்சரவையில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ABVP அமைப்பின் உறுப்பினராரான தானிஷ் ஆசாத் அன்சாரி இணை அமைச்சராக பதவியேற்றுக்கொண்டார். 32 வயதான அன்சாரி லக்னோ பல்கலைக்கழகத்தில் மாணவ அரசியலில் ஈடுபட்டிருந்தார். இவருக்கு தேர்தலுக்கு முன்னர் பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு பொதுச்செயலாளராக பதவி வழங்கப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்