நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் - காங்கிரஸ் அறிவிப்பு

எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து வருகிற 31ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
x
எரிபொருள் விலையேற்றத்தை கண்டித்து வருகிற 31ம் தேதி நாடு தழுவிய ஆர்ப்பாட்டத்தை, காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.

காங்கிரஸ் கட்சியின் அனைத்து மாநில பொறுப்பாளர்கள் மற்றும் தேசிய பொதுச்செயலாளர்களுடன் காங்கிரஸ் தேசிய பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு மாநிலங்களில் நிலவும் அரசியல் சூழல் மற்றும் தேசிய அளவிலான முக்கிய பிரச்சினைகள் குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. இறுதியில், வருகிற 31ஆம் தேதி எரிபொருள் விலை ஏற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு விலைவாசி இல்லாத பாரதம் என்றும் பெயரிடப்பட்டுள்ளது.
மேலும் ஏப்ரல் 2ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களிலும், ஏப்ரல் 7ஆம் தேதி மாநில தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடத்த காங்கிரஸ் கட்சி முடிவு செய்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்