"மன்னிப்பு கேட்காவிட்டால் ரூ.100 கோடி நஷ்டஈடு" - அண்ணாமலைக்கு ஆர்.எஸ்.பாரதி எச்சரிக்கை

முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார்.
x
முதலமைச்சரின் துபாய் பயணம் குறித்து அவதூறு பரப்பிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், சட்ட நடவடிக்கையை சந்திக்க நேரிடும் என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி எச்சரித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழக வளர்ச்சிக்காக அரசு முறை பயணமாக துபாய் சென்றுள்ள முதலமைச்சர், சொந்த பணத்தை முதலீடு செய்வதற்காக சென்றுள்ளதாக, அண்ணாமலை அவதூறு பரப்புவதாக தெரிவித்தார். அவர் 24 மணிநேரத்திற்குள் பகிரங்க மன்னிப்பு கேட்காவிட்டால், 100 கோடி ரூபாய் கேட்டு மான நஷ்டஈடு வழக்குத் தொடரப்படும் என்றும் எச்சரித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்