முதலமைச்சர் ஸ்டாலின் நாளை துபாய் பயணம்
துபாயில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மாலை துபாய் செல்கிறார்.
துபாயில் நடைபெற்று வரும் வர்த்தக கண்காட்சியில் கலந்துகொள்ள முதலமைச்சர் ஸ்டாலின் நாளை மாலை துபாய் செல்கிறார். துபாய் கண்காட்சியில் தமிழக அரசு சார்பாக கைத்தறி, விவசாயம் உள்ளிட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கண்காட்சியில் பங்கேற்பதற்காக, முதலமைச்சர் ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் துபாய் செல்கிறார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் முதலமைச்சர், பன்னாட்டு முதலீட்டாளர்களை சந்திக்கிறார். தி.மு.க நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர் உதயநிதி உள்ளிட்டோரும் துபாய் செல்கின்றனர்.
Next Story