"20 ஆயிரம் புத்தகங்கள் வாசித்திருக்கும் அதிமேதாவிகள்" - கடுமையாக விமர்சித்த செந்தில் பாலாஜி
மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, 20 ஆயிரம் புத்தகங்கள் வாசித்திருக்கும் அதிமேதாவிகளுக்கு புரிதல் வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்து உள்ளார்.
மின்வாரிய ஒப்பந்தம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, 20 ஆயிரம் புத்தகங்கள் வாசித்திருக்கும் அதிமேதாவிகளுக்கு புரிதல் வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையை மறைமுகமாக விமர்சித்து உள்ளார்.
எண்ணூர் விரிவாக்க மின் திட்ட ஒப்பந்தம் தொடர்பாக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியும், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் ஒருவொரையொருவர் விமர்சித்து வருகின்றனர். நஷ்டத்தில் இயங்கும் பி.ஜி.ஆர். நிறுவனத்துக்கு மின்வாரிய ஒப்பந்தம் வழங்கப்பட்டு இருப்பதாகவும், அந்த நிறுவனம் திமுகவிற்கு வேண்டப்பட்ட நிறுவனம் என்றும் அண்ணாமலை கூறி இருந்தார். இதற்கு பதிலளித்த செந்தில் பாலாஜி, அதிமுக ஆட்சியின்போது ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதாகவும், அண்ணாமலை தனது குற்றச்சாட்டுகளை 24 மணிநேரத்தில் நிரூபிக்க வேண்டும் என்றும் தெரிவித்து இருந்தார். இதனிடையே, தனக்கு கெடு விதிக்க செந்தில் பாலாஜி யார் என அண்ணாமலை கேள்வி எழுப்பி இருந்தார். இந்நிலையில், வாழ்ந்த 13 ஆயிரத்து 700 நாட்களில் 20 ஆயிரம் புத்தகம் வாசித்திருக்கும் அதிமேதாவிகளுக்கு புரிதல் வேண்டும் என டுவிட்டரில் செந்தில் பாலாஜி பதிவிட்டு உள்ளார். மதுரையில் நடந்த நிகழ்ச்சியொன்றில், தான் 20 ஆயிரம் புத்தகங்கள் வாசித்து இருப்பதாக அண்ணாமலை கூறியிருந்த நிலையில், அமைச்சர் செந்தில் பாலாஜி இவ்வாறு விமர்சித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
Next Story