அதிமுக கொடி கட்டிய காரில் வந்து சாமி தரிசனம் செய்த சசிகலா
மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார்.
மதுராந்தகம் ஏரி காத்த கோதண்ட ராமர் கோயிலில் சசிகலா சாமி தரிசனம் செய்தார். அதிமுக கொடி கட்டிய காரில் வந்த சசிகலா, கோயிலில் உள்ள ராமர் சன்னதி, அம்பாள் சன்னதிகளில் சாமி தரிசனம் செய்தார். இதையடுத்து கோபூஜை செய்த அவர், அங்கிருந்து மேல்மருவத்தூருக்கு காரில் புறப்பட்டுச் சென்றார். மேல்மருவத்தூரை தொடர்ந்து மேல்மலையனூர் அங்காளம்மன், மயிலம் முருகன் கோவில், திருவக்கரை வக்ரகாளியம்மன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு விழுப்புரம் வழியாக தஞ்சாவூர் செல்கிறார்.
Next Story