"முதல்வரின் அறிவிப்பை பாராட்டுகிறேன்" - கமல்

மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் கொண்டுவரும் அறிவிப்பை வரவேற்பதாக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
x
மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்திய ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் கொண்டுவரும் அறிவிப்பை வரவேற்பதாக மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நகர்ப்புற உள்ளாட்சியில், மக்களாட்சி நிலைப்பெற ஏரியா சபை மற்றும் வார்டு கமிட்டி அமைப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி, பிப்ரவரி 21ஆம் தேதி தலைமைச் செயலாளரிடம் மனுக் கொடுத்தாக சுட்டிக்காட்டியுள்ள கமல்ஹாசன்,  விரைவில் ஏரியா சபை, வார்டு கமிட்டிகள் நடைமுறைப்படுத்தப்படும் என முதல்வர் அறிவித்துள்ளதற்கு வரவேற்று பாராட்டுவதாக தெரிவித்துள்ளார். இந்த திட்டத்தை மாநகராட்சி, பேரூராட்சி பகுதிகளிலும் கொண்டுவர வேண்டும் என்றும் கமல்ஹாசன் கோரியுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்