"தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களை திமுக காப்பாற்றும்" - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்
தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவது திமுக அரசு என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவது திமுக அரசு என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் ஸ்டாலினின் மனைவி துர்காவின் சகோதரி இல்லத் திருமண விழா சென்னை தேனாம்பேட்டை அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பங்கேற்று முதல்வர் ஸ்டாலின் சிறப்புரையாற்றினார். அப்போது, "உள்ளூர் தமிழனாக இருந்தாலும் சரி, உக்ரைன் தமிழனாக இருந்தாலும் சரி அவர்களைத் திமுக காப்பாற்றும்" என்றார். உக்ரைனில் இருந்து அனைத்து தமிழர்களும் மீட்கப்பட்டு விட்டதாகவும் குறிப்பிட்டார். மேலும், மீட்புப் பணிக்காக நாடாளுமன்ற உறுப்பினர்கள், மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு டெல்லியிலேயே சென்று தங்கி இதற்கான பணிகளை மேற்கொண்டதாகப் பாராட்டிய முதல்வர், தமிழர்கள் எங்கிருந்தாலும் அவர்களைக் காப்பாற்றுவது திமுக அரசு என்று பெருமிதம் தெரிவித்தார்.
Next Story