"பாஜக வெற்றிக்கு மாயாவதியும் ஓவைசியும் காரணம்" -பத்ம விருதுகள் கொடுங்கள்- சிவசேனா எம்.பி. விமர்சனம்

உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு மாயாவதியும் ஓவைசியும்தான் காரணம் என்றும், அவர்களுக்கு பத்ம விபூஷன் மற்றும் பாரத ரத்னா விருதுகளை வழங்க வேண்டும் என்றும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார்.
x
உத்தரப்பிரதேச தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதற்கு மாயாவதியும் ஓவைசியும்தான் காரணம் என்றும், அவர்களுக்கு பத்ம விபூஷன் மற்றும் பாரத ரத்னா விருதுகளை வழங்க வேண்டும் என்றும் சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் விமர்சித்து உள்ளார். தேர்தல் முடிவுகள் குறித்து மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், உத்தரப்பிரதேசத்தில் பாஜக அமோக வெற்றி பெற்று இருந்தாலும் சமாஜ்வாடி கட்சியின் வாக்கு சதவிகிதம் 3 மடங்கு உயர்ந்து இருப்பதாக கூறினார். கடந்த தேர்தலில் 42 தொகுதிகளை வென்ற சமாஜ்வாடி, தற்போது 100க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று இருப்பதாகவும் அவர் கூறினார். பாஜகவின் வெற்றிக்கு பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதியும், ஏ.ஐ.எம்.ஐ.எம். கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசியும் பங்களித்து இருப்பதாக சஞ்சய் ராவத் குற்றம்சாட்டினார்.

Next Story

மேலும் செய்திகள்