பாஜக கோட்டையாக மாறுகிறதா கோவா?

40 சட்டமன்ற தொகுதிகளை கொண்ட சிறிய மாநிலமான கோவாவில் சரிபாதி இடங்களை பா.ஜ.க வென்றிருக்கும் நிலையில், முந்தைய சட்டமன்ற தேர்தல் முடிவுகளை இதனோடு ஒப்பிட்டு அலசுகிறது இந்தத் தொகுப்பு...
x
2002 சட்டமன்ற தேர்தலில்,  பாஜக 17 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 1 இடத்திலும் வென்றன. பாஜகவின் மனோகர் பரிக்கர் முதல்வராக பதவியேற்றார்.

2007 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சி 16 இடங்களிலும், பாஜக 14 இடங்களிலும், தேசியவாத காங்கிரஸ் கட்சி 3 இடங்களிலும் வென்றன. தேசியவாத காங்கிரஸின் ஆதரவுடன் காங்கிரஸ் கட்சியின் திகம்பர் காமத் முதல்வராக பதவியேற்றார்.

2012 சட்டமன்ற தேர்தலில்,  பாஜக 21 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 9 இடங்களிலும், சுயேட்சைகள் 5 இடங்களிலும் வென்றனர். பாஜகவின் 
மனோகர் பரிக்கர் மீண்டும் முதல்வரானார்.

2017 சட்டமன்ற தேர்தலில்,  பாஜக 13 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 17 இடங்களிலும், சுயேட்சைகள் 3 இடங்களிலும் வென்றனர். சிறிய கட்சிகளின் ஆதரவுடன் பாஜகவின் மனோகர் பரிக்கர் மீண்டும் முதல்வரானார்.

2022 சட்டமன்ற தேர்தலில்,  பாஜக 20 இடங்களிலும், காங்கிரஸ் கட்சி 11 இடங்களிலும், ஆம் ஆத்மி கட்சி 2 இடங்களிலும் சுயேட்சைகள் 3 
இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளனர்.Next Story

மேலும் செய்திகள்