மேயர், துணை மேயர் பதவிக்கு தேர்தல் - தி.மு.க. கூட்டணி கட்சிகளிடையே பேச்சுவார்த்தை தொடக்கம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர், துணை மேயர் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகள் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது.
x
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் மேயர்,  துணை மேயர் நகராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகள் தொடர்பாக திமுக கூட்டணி கட்சிகளுடனான பேச்சுவார்த்தை தொடங்கியது.  

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அமைச்சர் கே.என் நேருவின் இல்லத்தில் நடைபெற்று வரும் இந்த பேச்சுவார்த்தையில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், மதிமுக, விடுதலை சிறுத்தை கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சி பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.  வரும்  4 -ந் தேதி  மேயர் உள்ளிட்ட தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த பேச்சுவார்த்தை தொடங்கி நடைபெற்று வருகிறது. அண்மையில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுக கூட்டணி 21 மாநகராட்சியையும் , 132 நகராட்சிகளையும்,  435 பேரூராட்சியை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்