காங்கிரஸ்தான் 3 வது பெரிய கட்சி - கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ்தான் 3 வது பெரிய கட்சி - கே.எஸ்.அழகிரி
காங்கிரஸ்தான் 3 வது பெரிய கட்சி - கே.எஸ்.அழகிரி தமிழகத்தின் மூன்றாவது பெரிய கட்சியாக காங்கிரஸ் வளர்ந்துள்ளது என அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே.எஸ். அழகிரி கூறியுள்ளார். சென்னை சத்தியமூர்த்தி பவனில், ஈ.வி.கே.சம்பத் நினைவு நாள் அனுசரிப்பு நிகழ்வு நடைபெற்றது. அதில், பங்கேற்ற கே.எஸ். அழகிரி, பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, திமுக தலைமையிலான கொள்கை கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது என்றார். பாஜக-வுடன் கூட்டணி சென்றதால், அதிமுகவுக்கு சரிவு ஏற்பட்டிருப்பதாகவும், இதைவிட பெரிய பாதிப்பு ஏற்படும் என்றும் கூறினார். காங்கிரஸ் தனித்து நின்றிருந்தால், 10 மடங்கு அளவுக்கு வெற்றி பெற்றிருப்போம் என்றும் கே.எஸ். அழகிரி தெரிவித்தார்.
Next Story