அதிமுக வேட்பாளர் கைது - காவல்நிலையம் முன்பு அதிமுகவினர் போராட்டம்
சேலத்தில் அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையம் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலத்தில் அதிமுக வேட்பாளர் கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து காவல்நிலையம் முன்பு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம், இந்திராநகர் பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக 58 ஆவது அதிமுக வேட்பாளர் பாண்டியன் சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்த திமுக வேட்பாளர் மாநகராட்சி ஊழியர்களின் உதவியுடன் பாதாள சாக்கடையை சுத்தம் செய்து கொண்டிருந்துள்ளார். இதற்கு, அதிமுக வேட்பாளர் எதிர்ப்பு தெரிவிக்கவே அதிமுகவினருக்கும் திமுகவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, இது தொடர்பாக அதிமுக வேட்பாளர் பாண்டியனை போலீசார் கைது செய்துள்ளனர். இதனை, கண்டித்து காவல்நிலையம் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டதோடு காவல்துறை வாகனத்தையும் சிறைப்பிடித்தனர்.
Next Story