"வங்கி கணக்கிற்கு 15 லட்சம் ரூபாய் வந்ததா ?" - ராகுல்காந்தி கேள்வி
பொதுமக்களின் வங்கி கணக்கிற்கு 15 லட்ச ரூபாய் வந்ததா என, கேள்வி எழுப்பி பஞ்சாப்பில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
பொதுமக்களின் வங்கி கணக்கிற்கு 15 லட்ச ரூபாய் வந்ததா என, கேள்வி எழுப்பி பஞ்சாப்பில், காங்கிரஸ் எம்.பி. ராகுல்காந்தி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டார்.
வருகிற 20 ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள பஞ்சாப் மாநிலம் ஹோஷியார்பூரில் காங்கிரஸ் கட்சிக்காக, ராகுல்காந்தி தீவிரமாக வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய ராகுல்காந்தி, ஒவ்வொரு இந்தியரின் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் செலுத்தப்படும் என மோடி கூறியிருந்த நிலையில், யாருக்காவது கிடைத்ததா என கேள்வி எழுப்பினார்.
பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் யாருக்கு என்ன பயன் கிடைத்தது என ராகுல்காந்தி வினவினார்.
சுமார் ஒரு வருட காலமாக டெல்லியின் எல்லைப்பகுதியில் போராடிய விவசாயிகளில் பலர் உயிரிழந்த நிலையில், அவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நிமிடங்கள் அஞ்சலி கூட செலுத்தவில்லை என புகார் கூறினார். அதே சமயம் காங்கிரஸ் ஆளும் ராஜஸ்தான் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் உயிரிழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்கப்பட்டதாகவும் பிரசாரத்தின் போது ராகுல்காந்தி குறிப்பிட்டார்.
Next Story