தென்காசியில் சித்த மருத்துவ கல்லூரி "மாநில அரசு கோரிக்கை வைத்தால் பரிசீலிப்பதாக உறுதி" - மத்திய ஆயுஷ்துறை அமைச்சர்
தென்காசியில் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக மாநில அரசிடமிருந்து கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்படும் என மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தென்காசியில் சித்த மருத்துவ கல்லூரி அமைப்பது தொடர்பாக மாநில அரசிடமிருந்து கோரிக்கை வந்தால் பரிசீலிக்கப்படும் என மத்திய ஆயுஷ்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய திமுக எம்பி தனுஷ் குமார், அகத்திய முனிவர் வாழ்ந்த பொதிகை மலையில் சித்த மருத்துவத்திற்கு தேவையான ஏராளமான மூலிகைகள் உள்ளதாக குறிப்பிட்டார். மேலும், தென்காசியில் சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் அமைக்கப்படுமா எனவும் கேள்வி எழுப்பினார். இது குறித்து பதில் அளித்த மத்திய ஆயுஷ் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவால், மாநில அரசிடமிருந்து இது தொடர்பாக கோரிக்கை வந்தால் பரிசீலிப்பதாக தெரிவித்தார்.
Next Story