"கோவாவில் ஊழல், பணம் மூலம் பாஜக கைப்பற்றியது" - ராகுல் காந்தி
2017ஆம் ஆண்டு கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டிய சூழலில், ஊழல் செய்து பாஜக ஆட்சி அமைத்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
2017ஆம் ஆண்டு கோவாவில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க வேண்டிய சூழலில், ஊழல் செய்து பாஜக ஆட்சி அமைத்ததாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
கோவாவிற்கு பிரச்சாரம் செய்ய சென்ற காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, மட்கான் பகுதியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கோவா மக்கள் 2017 ஆம் ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் கட்சியை தான் அடுத்த 5 ஆண்டுகளுக்கு தேர்ந்தெடுத்தார்கள் என்றும், ஆனால் பாஜக அதை ஊழல் மற்றும் பணம் மூலமாக திருடிக் கொண்டது என்றும் கூறினார். இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளில் எந்த ஒரு வளர்ச்சி திட்டமும் அவர்கள் செய்யவில்லை என்றும், வேலையின்மை அதிகரித்துள்ளதாக மக்கள் குற்றம் சாட்டுவதாகவும் ராகுல் காந்தி தெரிவித்தார். காங்கிரஸ் கட்சி கோவா மாநிலத்தை நிலக்கரி மையமாக மாற்ற விடாது என்று தெரிவித்த அவர்,
எப்படி 3 வேளாண் சட்டங்களும் தடுத்து நிறுத்தப்பட்டதோ அதேபோல் நிலக்கரி திட்டமும் தடுத்து நிறுத்தப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
Next Story