நேரலையில் ஒளிபரப்பாகும் சிறப்பு சட்டமன்ற கூட்டம் ..!
நீட் விவகாரம் தொடர்பான சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
நீட் விவகாரம் தொடர்பான சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
அனைத்து கட்சி கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, நீட் விலக்கு மசோதா தொடர்பான சிறப்பு சட்டமன்ற கூட்டம் நாளை புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ளது. நாளை தினம் நீட் விலக்கு மசோதாவை நிறைவேற்றி மீண்டும் ஆளுநருக்கு அனுப்பப்பட உள்ளது. சட்டப்பேரவையின் சிறப்பு கூட்டத்திற்கான ஏற்பாடுகள் புனித ஜார்ஜ் கோட்டையில் முடுக்கிவிடப்பட்டுள்ளது. அந்த கூட்டத்தை நேரடியாக ஒளிபரப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்கான சட்ட மசோதாவை ஆளுநர் ஆர்.என்.ரவி ஏற்கனவே திருப்பி அனுப்பினார் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story